ஷென் ஹாய் யோங் ஷி நீர் மூழ்கிக்கலனின் சோதனை வெற்றி

வான்மதி 2017-10-03 16:21:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷென் ஹாய் யோங் ஷி நீர் மூழ்கிக்கலனின் சோதனை வெற்றி

சீனாவின் ஷென் ஹாய் யோங் ஷி எனும் மனிதரை ஏற்றிச்செல்லும் நீர் மூழ்கிக்கலன் தென் சீனக் கடற்பரப்பில் அனைத்து சோதனைகளையும் நிறைவேற்றி, 3ஆம் நாளன்று சான் யா துறைமுகத்துக்கு வெற்றிகரமாகத் திரும்பியது. கடந்த 50க்கும் மேற்பட்ட நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் மூலம், 4500 மீட்டர் ஆழத்தை எட்டக்கூடிய இந்த நீர் மூழ்கிக்கலனின் பல்வேறு செயல்திறன்களும் முழுமையாகச் சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஷென் ஹாய் யோங் ஷி நீர் மூழ்கிக்கலனின் சோதனை வெற்றி

ஜியாவ் லோங் எனும் நீர் மூழ்கிக்கலனை அடுத்து, ஷென் ஹாய் யோங் ஷி எனும் நீர் மூழ்கிக்கலன், சீனாவின் ஆழ்கடல் ஆய்வு சாதனத் தயாரிப்பில் மற்றொரு மைல் கல்லாகும். சீன கடல் துறையின் வளர்ச்சிக்கு இது துணைபுரியும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்