உலகில் 75 விழுக்காட்டு தேன்களில் பூச்சிக்கொல்லி கண்டுபிடிப்பு:ஆய்வு முடிவு

மதியழகன் 2017-10-08 17:35:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைத்த கிட்டத்தட்ட 200 தேன் மாதிரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சுமார் 75 விழுக்காடு தேன் மாதிரிகளில் நியூனிகோடினொய்ட் என்ற பூச்சிக்கொல்லி வைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ஆய்வு முடிவு, அண்மையில்‘அறிவியல்’எனும் அமெரிக்க இதழில் வெளியிடப்பட்டது. இருப்பினும், தேனில் கண்டுபிடிக்கப்பட்ட நியூனிகோடினொய்ட் என்ற பொருட்களின் செறிவு, மனிதர்கள் சாப்பிடக் கூடிய பாதுகாபாப்பு நிலை வரம்புக்குள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வேளாண் துறையில் பூச்சித் தாக்குதலிலிருந்து பயிர்களைக் காக்க, நியூனிகோடினொய்ட் எனும் பூச்சிக்கொல்லி, உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது, தேனீக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான ஒரு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்