சீன அறிவியல் ஆய்வு கப்பலின் அட்லாண்டிக் பயணம் துவக்கம்

வான்மதி 2017-10-09 10:36:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அறிவியல் ஆய்வு கப்பலின் அட்லாண்டிக் பயணம் துவக்கம்

சீனாவின் முதாலவது உலக கடல் சார் பன்னோக்கு அறிவியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் சியாங் யாங் ஹோங்-01 கப்பல் 8ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் கேப் டௌன் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, அட்லாண்டிக் மாகடலில் பயணம் மேற்கொள்ளத் துவங்கியது.

அட்லாண்டிக் மாகடலில் மேற்கொள்ளும் பயணம் இந்த அறிவியல் ஆய்வின் 2ஆவது மற்றும் 3ஆவது பயணக் கட்டங்களாகும். திட்டப்படி, சியாங் யாங் ஹோங்-01 கப்பல், தெற்கு அட்லாண்டிக் மாகடலின் மத்திய முகடு பகுதியில் கடல் சார் நிலவியல், உயிரினச்சூழல், நீர் சுழற்சி, காலநிலை உள்ளிட்ட பன்னோக்கு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

இவ்வாண்டு ஆகஸ்ட் 28ஆம் நாள் சீனாவின் சிங்தௌ நகரிலிருந்து புறப்பட்டு இந்த அறிவியல் ஆய்வில் ஈடுபடத் தொடங்கிய சியாங் யாங் ஹோங்-01 கப்பல், திட்டப்படி அடுத்த ஆண்டு மே 15ஆம் நாள் சிங்தௌ நகருக்குத் திரும்பும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்