சீனாவின் ஃபாஸ்ட் தொலைநோக்கி 2 துடிப்பு விண்மீன்கள் கண்டுபிடிப்பு

2017-10-10 15:17:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் ஃபாஸ்ட் தொலைநோக்கி 2 துடிப்பு விண்மீன்கள் கண்டுபிடிப்பு

உலகில் பெரிய அளவிலான, ஒற்றைத் தட்டு ரேடியோ தொலைநோக்கியான, சீனாவின்ஃபாஸ்ட், ஓர் ஆண்டு சோதனைக்குப் பிறகு, 2 துடிப்பு விண்மீன்களைக் கண்டறிந்துள்ளதாக சீன தேசிய வானியல் ஆய்வுக்கூடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இந்த விண்மீன்களுக்கு J1859-01, J1931-01 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவை இரண்டும், புவியிலிருந்து முறையே, 16,000 மற்றும் 4,100 ஒளி ஆண்டு தொலைவில், 1.83 விநாடிகள் மற்றும் 0.59 விநாடிகளில் சுற்றி வருகின்றன.

சீனாவின் ஃபாஸ்ட் தொலைநோக்கி 2 துடிப்பு விண்மீன்கள் கண்டுபிடிப்பு

ஃபாஸ்ட் திட்டத்தின் துணை இயக்குநர் பெங் போ கூறுகையில், வானியல் தொலைநோக்கியின் சோதனைக்கு பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகள் தேவைப்படும். ஆனால், ஓராண்டுக்குள்ளேயே ஃபாஸ்ட்டின் சாதனைகள் மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்