சீனாவின் 8ஆவது வட துருவ ஆய்வுக்குழு வெற்றிகரமாக திரும்பியது

வான்மதி 2017-10-10 15:20:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் 8ஆவது வட துருவ ஆய்வுக்குழுவைச் சேர்ந்த 96 உறுப்பினர்கள் 83 நாட்கள் தொடர்ந்த வட துருவ அலுவலுக்கான முதலாவது ஆய்வை நிறைவேற்றி, 10ஆம் நாள் சுயே லோங் கப்பல் மூலம் ஷாங்காயிலுள்ள சீன துருவ ஆய்வுக்கான உள்நாட்டு தளத்தின் துறைமுகத்துக்குத் திரும்பியது.

கடந்த ஜுலை 20 நாள் ஷாங்காயில் சுயே லோங் அறிவியல் ஆய்வுக் கப்பலின் மூலம் தொடங்கிய இந்த ஆய்வின் மொத்த பயண தூரம் 20590 கடல் மைல் ஆகும். இதில் பனிப் பகுதியில் பயணித்த தூரம் மட்டும் 1995 கடல் மைல் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு வட துருவ அறிவியல் ஆய்வில், காலநிலை, வளிமண்டலக் கூறுகள், கடலின் மேற்பரப்பு தட்பவெப்ப நிலை, கடலடி நில அமைவு உள்ளிட்டவை மீதான கண்காணிப்பு மற்றும் அளவீடு மேற்கொள்ளப்பட்டுள்ளன. வட துருவ அலுவலுக்கான ஆய்வின் அமைப்பு முறையின் கட்டுமானத்தை இது முன்னேற்றியுள்ளது. பனி வழி பட்டுப்பாதை கட்டுமானத்துக்கும் இது முக்கிய ஆய்வாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்