​நட்சத்திரங்கள் மோதலில் இருந்து ஈர்ப்பு சக்தி அலைகள் கண்டுபிடிப்பு; இது முதல்முறை!

மதியழகன் 2017-10-17 15:28:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நட்சத்திரங்கள் மோதலில் இருந்து ஈர்ப்பு சக்தி அலைகள் கண்டுபிடிப்பு; இது முதல்முறை!

பேரண்டத்தில் இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஒன்றாக இணைந்தபோது உருவான ஈர்ப்பு சக்தி அலைகள் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளதாக, அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது.

நட்சத்திரங்கள் மோதலில் இருந்து ஈர்ப்பு சக்தி அலைகள் கண்டுபிடிப்பு; இது முதல்முறை!

ஈர்ப்பு சக்தி அலைகளைத் தவிர, இந்த நிகழ்வினால் ஏற்பட்ட ஒளியையும் வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஈர்ப்பு சக்தி அலைகளின் கண்டுபிடிப்பு, மிக முக்கியமான ஒன்று. இதற்காக, பல நாடுகளைச் சேர்ந்த வானியலாளர்கள் ஒத்துழைப்புடன் செயல்பட்டுள்ளனர். இதைப் பார்வையிடும் வகையில், தரையிலும் விண்ணிலும் பல தொலை நோக்கிகள் பயன்படுத்தப்பட்டன.ஈர்ப்பு சக்தி அலைகள் ஏற்பட்டபோது, உலகின் 4 தொலைநோக்கிகள் மட்டும் அதைக் கண்டுபிடித்தன. இவற்றில், சீனாவின் முதலாவது ஊடு கதிர் விண்வெளி தொலைநோக்கியும் ஒன்றாகும்.

 

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்