உலக ஹார்ட் கோர் தொழில் நுட்ப மையமாக மாறும் சி ஆன்

மதியழகன் 2017-11-07 15:02:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலக ஹார்ட் கோர் தொழில் நுட்ப மையமாக மாறும் சி ஆன்

2017ஆம் ஆண்டு உலக ஹார்ட் கோர் தொழில் நுட்பப் புதுமையாக்க மாநாடு நவம்பர் 7ஆம் நாள் சீனாவின் ஷான் சி மாநிலத் தலைநகர் சி ஆனில் துவங்கியது.

நோபல் பரிசு பெற்ற அறிஞர், நிபுணர்கள், தொழிலதிபர் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

உலகத்தை மாற்றி, எதிர்காலத்திற்கு வழிகாட்டி, சி ஆன் நகரை வளர்க்கும் ஹார்ட் கோர் தொழில் நுட்பம் என்பது நடப்பு மாநாட்டின் தலைப்பு ஆகும். இம்மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு, வான் மற்றும் விண்வெளி, உயிரினத் தொழில் நுட்பு, நுண் சில்லு, தகவல் தொழில் நுட்பம், புதிய பொருட்கள், புதிய எரியாற்றல், நுண்ணறிவுத் தயாரிப்பு ஆகிய எட்டுத் துறைகளில் காணப்படும் மிக முக்கிய தொழில் நுட்பங்கள் குறித்து 16 கருத்தரங்குகள் நடத்தப்படும்.

உலக ஹார்ட் கோர் தொழில் நுட்ப மையமாக மாறும் சி ஆன்

சி ஆன் நகரம், ஹார்ட் கோர் தொழில் நுட்பத்தின் அடையாளச் சின்னமாகவும், ஹார்ட் கோர் தொழில் நுட்ப நகரமாகவும் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்