புதிய அறிவியல் நகரங்களை உருவாக்கும் சீனா

சரஸ்வதி 2017-11-09 09:14:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய அறிவியல் நகரங்களை உருவாக்கும் சீனா

புதிய கட்டமைப்பு, புதிய வேலைவாய்ப்புகள், புதிய வாழ்க்கைமுறையுடன் கூடிய  அறிவியல் நகரங்களைச் சீனா உருவாக்கி வருகின்றது. இதன்  முதல் கட்டமாக ஷான் சி மாநிலத்தின் சி சியன் பகுதியில் பெங் சி என்னும் ஒரு புதிய நகரைக் கட்டியமைப்பதற்கான பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.  இதுபற்றிய அறிவியல் நகர வளர்ச்சி உச்சநிலை கருத்தரங்கு பெங்க் சி நகரில் நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் பவுண்டர்ஸ் ஸ்பேஸ் நிறுவனத்தின் நிறுவனரும் புகழ்பெற்ற முதலீட்டாளருமான ஸ்டீவ் ஹோஃப்மன் உள்ளிட்ட வல்லுநர்கள் கலந்து கொண்டு புதிய நகரில் தொழில் தொடங்குவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்த விரிவான தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

பெங் சி அறிவியல் நகரம் பெரிய தரவு மற்றும் ஹார்டு & கோர் தொழில்நுட்பங்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டுவரும் மிகப்பெரிய நவீன நகரம் ஆகும். அமெரிக்காவின் சிலிக்கான் வேலியை முன்மாதியாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த நகரில் தொடக்கநிலை வணிகம் மேற்கொள்பவர்களுக்கான சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சேவை மையங்களின் வழி தொடக்க நிலை வணிகம் மேற்கொள்பவர்கள் வழிகாட்டுதலைப் பெற்றுச் சிறப்பான முறையில் தொழில் தொடங்க முடியும். அதோடு, சீனாவில் புதிய தலைமுறை தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில், இப்பகுதியில் ஹார்டு & கோர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உலகின் பல்வேறு நாட்டுக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் வகையில் புதிய கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படவுள்ளன.

புதிய அறிவியல் நகரங்களை உருவாக்கும் சீனா

நவீன வசதிகளோடு உருவாக்கப்படும் இந்த அறிவியல் நகரம் தன்னிறைவு பெற்ற நகரமாகவும் விளங்க வேண்டும் என்னும் கருத்தில் நகரத்தின் ஒரு பகுதியில் மழை நீர் சேகரிப்பு நகரம் (சீன மொழியில் ஹாய்மியன்நகரம்) ஒன்றும் கட்டியமைக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில், சீனாவின் தென்பகுதியை விட வடபகுதியில் மழை குறைவு. இதனால் மழைநீரைச் சேகரித்தல் என்பது மிகப்பெரும் பயனைத் தரும். கடும் மழை பெய்யும் காலங்களில் பூமியின் மேற்பரப்பில் மழை நீர் தேங்காத வகையில் குழாய்களின் வழி மழை நீரானது குறிப்பிட்ட பகுதியில் சேமிக்கப்பட்டு வறட்சியான காலங்களில் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றது. இயற்கையான வழி முறையில் மழை நீர் குறிப்பிட்ட சேமிப்பிடத்திற்குச் செல்லாத பொழுது, அந்தச் சிக்கலைக் கண்டறிந்து சரி செய்வதற்கு பெரிய தரவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

நீண்ட கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் பெங் சி அறிவியல் நகரை நீண்டகால வரலாறுடைய சி ஆன் நகரின் மையப் பகுதியில் கட்டியமைப்பதன் வழி பழமைக்கும் புதுமைக்குமான மிகச் சிறந்த பாலத்தைக் கட்டியமைத்துள்ளது சீனா.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்