கரும்பொருள் துகளைக் கண்டுபிடிக்கும் செயற்கைக் கோள் பெற்றுள்ள சாதனைகள்

2017-11-30 15:37:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரும்பொருள் துகளைக் கண்டுபிடிக்கும் செயற்கைக் கோள் பெற்றுள்ள சாதனைகள்

2015ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாள், கரும்பொருள் என்ற துகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில், “வுக்காங்”அல்லது“குரங்கு மன்னர்”எனும் செயற்கைக் கோள் ஒன்று விண்ணில் செலுத்தப்பட்டது. கரும்பொருள் துகள்கள் நிலவுவதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடிப்பது மற்றும் வானியற்பியல் ஆய்வு செய்வது, இந்த செயற்கைக் கோளின் மிக முக்கிய கடமையாகும்.

கரும்பொருள் துகளைக் கண்டுபிடிக்கும் செயற்கைக் கோள் பெற்றுள்ள சாதனைகள்

வுக்காங் செயற்கைக் கோள் மூலம், உலகில் மிகத் துல்லியமான உயர் ஆற்றல் அண்டக்கதிர்கள் நிறமாலை பெற்றுள்ளது என்று சீன அறிவியல் கழகம் அண்மையில் அறிவித்துள்ளது.

கண்ணுக்கு தெரியாத கரும்பொருளைப் அறிவியலாளர்கள் பார்வையிடுவதற்கு, புதிய கண்டுபிடிப்புகள் வாய்ப்பு அளிக்கும் என்று கரும்பொருள் கண்டுபிடிப்புச் செற்கைக் கோள் திட்டத்தின் முதன்மை அறிவியலாளரும் சீனாவின் சிஜின்ஷான் வான் ஆய்வகத்தின் துணை தலைவருமான சாங் ஜின் குறிப்பிட்டார்.

வுக்காங் செயற்கைக் கோள் மூலம் கிடைத்துள்ள முதல் தொகுதி ஆய்வு சாதனைகள், புகழ்பெற்ற நேச்சர் என்ற இதழின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது பற்றிய நேச்சர் இதழின் பெரும் சீனா பகுதிக்கான தலைமை இயக்குநர் ஈத் கேரட்னீர் பேசுகையில்,

உயர் ஆற்றல் துகள் என்ற இயற்பியல் ஆய்வில் பெரும் முன்னேற்ற ரீதியான சாதனைகளை சீன அறிவியலாளர்கள் பெறுகின்றனர். அடிப்படை அறிவியல் துறையில் சீனா தொடர்ந்து ஒதுக்கீட்டை அதிகரித்து வருகிறது. இது, அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீன அறிவியல் கழகத்தின் வேந்தர் பைய் ட்சுன்லி பேசுகையில்,

சீன அறிவியல் கழகம், அடிப்படை அறிவியலின் முன்னிலைத் துறைக்கு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. சீன அறிவியலாளர்கள் முக்கிய முன்னிலை ஆய்வுகளுக்கு அறைகூவலை விடுப்பதற்கு ஆதரவளிக்கும் என்று தெரிவிதித்தார்.

கரும்பொருள் துகளைக் கண்டுபிடிக்கும் செயற்கைக் கோள் பெற்றுள்ள சாதனைகள்

ஈர்ப்பு அலைக் கண்டுபிடிப்பு,பேரண்டத்தின் தோற்றம், கரும்பொருள் மற்றும் சூரியன் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் ஆகிய ஆய்வுத் துறைகளில் கவனத்தைக் குவித்து, விண்வெளி அறிவியல் செயற்கைக் கோள்களைத் தொடர்ந்து ஆய்ந்து தயாரிக்க பாடுபடுவோம்.மேலும், எதிர்காலத்தில் தலைமை பங்காற்றி, 2035ஆம் ஆண்டு மற்றும் 2050ஆம் ஆண்டு நோக்கி ஆழமான தொலைநோக்கு ஆய்வு மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

12MoreTotal 2 pagesNext

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்