2017ஆம் ஆண்டுக்கான 10 முக்கிய அறிவியல் தொழில் நுட்ப செய்திகள்

மதியழகன் 2018-01-01 16:23:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2017ஆம் ஆண்டுக்கான 10 முக்கிய அறிவியல் தொழில் நுட்ப செய்திகள்

2017ஆம் ஆண்டுக்கான சீனாவின் 10 முக்கிய அறிவியல் தொழில் நுட்ப செய்திகளையும் உலகின் 10 முக்கிய அறிவியல் தொழில் நுட்ப செய்திகளையும், சீன அறிவியல் கழகமும் சீன பொறியியல் கழகமும் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுத்துள்ளன.

—சீன அறிவியலாளர்கள்,வேதிப் பொருட்களால் முழுமையான உயிருள்ள குரோமோசோமை உருவாக்கியுள்ளனர்.

—சீனா தயாரித்துள்ள கடலுக்கு அடியில் பயணிக்கும் இயந்திரம் ஒன்று 6,392மீட்டர் ஆழத்தை எட்டி புதிய உலக சாதனைப் படைத்துள்ளது.

—பரபுப்பாணி கணினியின் கணிதல் திறனைத் தாண்டிய ஒளிக் குவாண்டம் கணினி உருவாக்கப்பட்டுள்ளது.

—சீனா தயாரித்த சி919 பெரிய பயணியர் விமானத்தின் முதல் பறத்தல் சோதனை வெற்றி பெற்றுள்ளது.

—கடலுக்கு அடியில் எரியும் பனி எனும் எரிப்பொருட்களை சீன பிரித்தெடுத்துள்ளது.

—சீனா தயாரித்த செயற்கை சூரியன் என்ற இயந்திரம் புதிய உலக பதிவை உருவாக்கியது

—புதிய ரக பெர்மியான் துகளை, சீன அறிவியலாளர்கள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.

—குவாண்டம் தொலைத் தொடர்பு வசதி சீனாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

—சீன அறிவியல் கழகம் உயர் விளைச்சல் தரும் புதிய நெல் வகையை வளர்த்துள்ளது.

—சீனா தயாரித்த வூக்காங் எனும் செயற்கைக் கொள் கரும்பொருளை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது

மேற்கூறிய 10 செய்திகள்,2017ஆம் ஆண்டு சீனாவின் 10 முக்கிய அறிவியல் தொழில் நுட்ப செய்திகளின் பட்டியலில் இடம்பெறுகின்றன.மேலும், மஜோரோனா பெர்மியான் என்ற துகள் கண்டுபிடிப்பு, ஈர்ப்பு அலை ஆய்வின் முன்னேற்றம், ஏவூர்தியின் மறுபயன்பாடு  உள்ளிட்டவை, உலகின் 10 முக்கிய அறிவியல் தொழில் நுட்ப செய்திகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 

 

 

 

 

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்