2018இல் குவய்சோ ஏவூர்திகளின் கடமைகள் அறிவிப்பு

வான்மதி 2018-01-04 11:21:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018இல் குவய்சோ ஏவூர்திகளின் கடமைகள் அறிவிப்பு

2018ஆம் ஆண்டில் குவய்சோ எனும் ஏவூர்திகள் குறைந்தது 5 கடமைகளை ஏற்கும் என்று 3ஆம் நாள் சீன விண்வெளிப் பயண அறிவியல் மற்றும் தொழிற்துறை குழுமத்தைச் சேர்ந்த 4ஆவது ஆய்வு கழகத்திலிருந்து கிடைத்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.

திண்ம எரிபொருள் பொறியைப் பயன்படுத்தி செலுத்தப்படும் குவய்சோ ஏவூர்திகள் நகரும் வாகனத்திலிருந்து செலுத்தப்பட முடியும். செயற்கைக் கோளின் வணிக மயமாக்க மற்றும் விரைவான ஏவுதலை இந்த ஏவூர்த்திகள் நிறைவு செய்ய முடியும்.

முதன்முறையாக கடமையில் ஈடுபடும் குவய்சோ-11 ஏவூர்தி ஒரே முறையில் 6 செயற்கைக் கோள்களை செலுத்தி, வேறுபட்ட சுற்றுவட்ட பாதைகளில் அவற்றை நிலைநிறுத்த விரும்பும் பயன்பாட்டாளர்களின் தேவையை நிறைவு செய்யும் என்று தெரிகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்