மின்னணுப் பொருட்களின் புதிய முன்னோடி: 5ஜி,செயற்கை நுண்ணறிவு

மதியழகன் 2018-01-09 11:00:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டு பன்னாட்டு நுகர்வு மின்னணு கண்காட்சி, 9ஆம் நாள் அமெரிக்காவின் நெவாடா மாநிலத்திலுள்ள லாஸ் வேகஸ் நகரில் துவங்கியது. 150க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 4,000 தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றன. இதில் 1,550 சீனத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

சி.ஈ.எஸ். என சுருக்கமாக அழைக்கப்படும் இக்கண்காட்சி, உலகின் மிக பெரிய நுகர்வு மின்னணுப் பொருட்களின் கண்காட்சியாக விளங்குகிறது. நுகர்வு மின்னணு பொருட்களின் துறையின் முன்னோடியாக கருதப்படும் இக்கண்காட்சி, அடுத்த ஆண்டில் வளர்ச்சிப் போக்கினை வெளிக்காட்டுகிறது.

5ஆவது தலைமுறை தொலைத் தொடர்பு தொழில் நுட்பம்(5ஜி), செயற்கை நுண்ணறிவு ஆகியவை 2018ஆம் ஆண்டு புதிய போக்கில் தலைமை இடம் வகிக்கின்றன. மேலும், துடிப்பான நகரம், மின்னணு முறை மருத்துவம் ஆகியவை, புதிய தொழில் நுட்பங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன என்று தெரிகிறது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்