2017ஆம் ஆண்டு, சீன உள்நாட்டின் சந்தைக்கு வரும் செல்லிடப்பேசியிகளின் எண்ணிக்கை

பூங்கோதை 2018-01-10 11:18:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2017ஆம் ஆண்டு, சீன உள்நாட்டின் சந்தைக்கு வரும் செல்லிடப்பேசியிகளின் எண்ணிக்கை

சீனத் தகவல் தொலை தொடர்பு ஆய்வகம் ஜனவரி 9ம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, 2017ஆம் ஆண்டு, சீன உள்நாட்டின் சந்தைக்கு வரும் செல்லிடப்பேசிகளின் எண்ணிக்கை 49.1 கோடியை எட்டியுள்ளது. மேலும், 1054 புதிய செல்லிடப்பேசி வகைகள் சந்தையில் நுழைந்துள்ளன.

சீனாவின் செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் வெவ்வேறான அளவில் வளர்ச்சியடைந்துள்ளன. கடந்த ஆண்டு, சந்தைக்கு வரும் ஹூவா வெய் என்னும் செல்லிடப்பேசியின் எண்ணிக்கை 15.3 கோடியை எட்டியுள்ளது. உலகச் சந்தையில் இது 10 விழுக்காட்டை வகித்து, உலகளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஒப்போ என்னும் செல்லிடப்பேசி 12 கோடி எண்ணிக்கையுடன் உலகளவில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்