கண்டங்களிடையே தொலைத் தொடர்பு:மிஷியஸ் குவாண்டம் செயற்கைக்கோளின் புதிய சாதனை

மதியழகன் 2018-01-21 15:55:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கண்டங்களிடையே தொலைத் தொடர்பு:மிஷியஸ் குவாண்டம் செயற்கைக்கோளின் புதிய சாதனை

மிஷியஸ் எனும் குவாண்டம் செயற்கைக் கோள் மூலம், கண்டங்களிடையே ரகசிய குறியீடுகளை பரிமாறுதல், தரவுகள் அனுப்புதல் மற்றும் காணொளித் தொடர்பு ஆகியவற்றை மறைய வைப்பதில் வெற்றி பெற்றுள்ளதாக, சீன அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் இருந்து 20ஆம் நாள் கிடைத்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் மற்றும்  சீன அறிவியல் கழகத்தின் ஆய்வுக் குழுக்கள், சீனத் தேசிய வானியல் நிலையம் ஆகியவை, ஆஸ்திரியா அறிவியல் கழகத்தின் அண்டன் ஜேய்லிங்கேர் ஆய்வுக் குழுவுடன், மிஷியஸ் செயற்கைக் கோளின் மூலம், சீனாவுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையே 7,600 கிலோமீட்டர் தூரத்தில் ரகசிய குறியீடுகளை பரிமாறியதோடு, தரவுகள் மற்றும் காணொளி வடிவிலான தவகல் தொடர்பை மறைய வைத்துள்ளன என்று  தெரிய வந்துள்ளது.

கண்டங்களுக்கிடையே தொலைத் தொடர்பை மறைய வைக்கும் திறனை, மிஷியஸ் செயற்கைக் கோள் கொண்டுள்ளதை, இந்த புதிய சாதனை குறிக்கிறது.

மிஷியஸ் செயற்கைக் கோள், உலகின் முதல் குவாண்டம் அறிவியல் சோதனைச் செயற்கைக் கோளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்