சீனாவின் அடிப்படை அறிவியல் ஆய்வில்20 முக்கிய பணிகள்

மதியழகன் 2018-02-01 11:19:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அடிப்படை அறிவியல் ஆய்வுகளை முழுமையாக வலுப்படுத்தும் வகையில் 20 முக்கிய பணிகளை சீனா தொடங்க திட்டமிட்டுள்ளது. சீன அரசு அண்மையில் வெளியிட்ட அடிப்படை அறிவியல் ஆய்வை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் என்ற ஆவணத்தில் இது இணைக்கப்பட்டுள்ளது.

மேலும்,அடிப்படை அறிவியல் ஆய்வு வளர்ச்சிக்காக மூன்று காலக் கட்டங்களாக செயல்படுத்தப்படும் இலக்குகளும் இந்த ஆவணத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.அதன்படி, 2020ஆம் ஆண்டு வரை, சீனாவின் அடிப்படை அறிவியல் ஆய்வின் ஒட்டுமொத்த நிலையும், சர்வதேச செல்வாக்கும் தெளிவாக உயரும். சில முக்கிய துறைகளில் உலகின் முன்னிலையில் சீனா இடம்பிடிக்க வேண்டும். 

2035ஆம் ஆண்டு வரை, அதன் ஒட்டுமொத்த நிலையும் சர்வதேச செல்வாக்கும் பெருமளவில் உயரும்.மேலதிக முக்கிய துறைகளில் உலகின் வளர்ச்சியை தலைமையேற்றி, உலகின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், மனித வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கிய செல்வாக்கினை ஏற்படுத்தும் அறிவியல் சாதனைகளை படைக்க வேண்டும்.

21ஆம் நூற்றாண்டின் முற்பாதிக்குள்ளாக உலகின் முக்கிய அறிவியல் மையாகவும் புதுமையாக்கல் தளமாகவும் சீனா உருவாக்கப்படும்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்