சீன-பாகிஸ்தான் கூட்டு அறிவியல் ஆய்வு நிறைவு

வான்மதி 2018-02-04 15:54:18
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆவணப் படம்

ஆவணப் படம்

சீனாவும் பாகிஸ்தானும் வட இந்து மாகடலில் மேற்கொண்ட முதலாவது கூட்டு அறிவியல் ஆய்வு 3ஆம் நாள் நிறைவுற்றது. இந்த ஆய்வு அணி உறுப்பினர்கள் சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த தென் சீனக் கடலின் கடலியல் ஆய்வுக் கூடத்தின் ஷி யான்-3 எனும் கப்பலின் மூலம் மேக்ரான் அகழியிலிருந்து கராச்சிக்குத் திரும்பினர்.

நடப்பு அறிவியல் ஆய்வின் போது, இருநாட்டு அறிவியலாளர்கள் மேக்ரான் அகழியில் கடின முயற்சிகளின் மூலம், கடல் சார் நிலவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் நுண்ணுயிரியல், புவி இயற்பியல் ஆகிய துறைகளில் முதலாவது தரவுகளையும் மாதிரிகளையும் சேகரித்துள்ளளனர். சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த மேக்ரான் கடற்பரப்பின் மீதான ஆய்வை முன்னேற்றுவதோடு, கடற்பரப்பிலான இருநாட்டு அறிவியலாளர்களின் ஒத்துழைப்பு அனுபவங்களையும் செழிப்பாக்கி, இருநாடுகளின் கடல் சார் அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இது உறுதியான அடிப்படையை உருவாக்கியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்