சீன மாணவர்கள் உண்மையான செயற்கை கோளைப் பயன்படுத்தும் அனுபவம்: இளமை-ஒன்று

மதியழகன் 2018-02-15 18:03:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மாணவர்கள் உண்மையான செயற்கை கோளைப் பயன்படுத்தும் அனுபவம்: இளமை-ஒன்று

கல்வித் துறைக்காக ஆராய்ந்து தயாரிக்கப்பட்டுள்ள “இளமை-ஒன்று” எனும் செயற்கை கோள், தற்போது வரை, சுற்று வட்டப் பாதையில் இயங்கும் சோதனைகளை நிறைவேற்றியுள்ளது. மேலும், பல்வகை தொழில் நுட்பத் திறன்கள், திட்டமிடப்பட்ட இலக்குகளை எட்டியுள்ளன. புவிக்கு வெற்றிகரமாக புகைப்படங்களையும் அது அனுப்பியுள்ளது.

சீனாவில் கல்வித் துறையில் பயன்பாட்டுப் பகிர்வுச் சேவை வழங்கும் முதலாவது செயற்கைக் கோள் இதுவாகும். கடந்த பிப்ரவரி 2ஆம் நாள், ஜியுச்சுவான் செயற்கைக் கோள் ஏவுத் தளத்தில் இருந்து இது விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக் கோளை வடிவமைத்துள்ள ஜியுத்தியன்வெய்சிங் எனும் வணிகம் ரீதியிலான விண்வெளி நிறுவனத்தின் தலைமை தொழில் நுட்ப அதிகாரி லியு லீக்குவன் கூறுகையில்

இளமை-ஒன்று செயற்கைக் கோளின் சோதனை நிறைவேற்றப்பட்டதுடன், பயன்பாட்டுக்கு வரும் கட்டம் தொடங்கியுள்ளது.துவக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நிலையங்களில், உண்மையான செயற்கைக் கோளைப் பயன்படுத்தும் அனுபவங்களை மாணவர்கள் பெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்