வணிக ரீதியான விண்வெளி நிறுவனங்களின் விரைவான வளர்ச்சி

மதியழகன் 2018-02-19 16:41:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் வணிக ரீதியான விண்வெளி நிறுவனங்களின் விரைவான வளர்ச்சி

ஜியுத்தியன்வெய்சிங் எனும் விண்வெளித் தொழில் நுட்ப நிறுவனத்தினால் வணிக ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விண்வெளி இணையத் திட்டம் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியுள்ளது.செயற்கைக் கோள்களின் வழியாக வலையமைப்பை உருவாக்கி, இணையச் சேவை வழங்கும் நோக்கில்,இத்திட்டம் செயலுக்கு வருகிறது.

சீனாவின் வணிக ரீதியான விண்வெளி நிறுவனங்களின் விரைவான வளர்ச்சி

திட்டப்படி, 2018ஆம் ஆண்டு பிற்பாதியில், ஒரே ஒரு ஏவூர்தி மூலம் 7 செயற்கைக் கோள்கள் ஏவப்படும். இதன் முயற்சியில், இந்த புதிய ரக இணையத்தின் முக்கிய தகவல் தொடர்புத் தொழில் நுட்பங்கள், பல செயற்கைக் கோள்கள் ஒன்றிணைந்து இயங்கும் திறன் ஆகியவை சோதிக்கப்படும்.

தற்போது சீனாவின் அரசு சாரா வணிக ரீதியான விண்வெளித் துறையில் காணப்பட்டுள்ள மிகப் பெரிய மற்றும் மிக சிக்கலான விண்வெளிச் செயற்திட்டம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளில், வணிக ரீதியிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விண்வெளிச் சந்தைகள் விரைவாக வளர்ந்துள்ளன. உலகமயமாக்கத்தால், தகவல் தொடர்புச் சந்தை சேவை பெரிதும் அதிகரித்துள்ளது. கூகுள், ஸ்பேஸ்-எக்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் தொழில் நுட்ப நிறுவனங்கள் இந்த சந்தையில் சேர்ந்து தீவிரமாக போட்டியிட்டு வருகின்றன. மேலும், ஐரோப்பா மற்றும் சீனாவின் விண்வெளி நிறுவனங்கள் அடுத்தடுத்து சொந்தமாக விண்வெளி இணையத் திட்டங்களை அறிவித்துள்ளன.

இது பற்றி, சி ஆன் நகரத்திலுள்ள சீன அறிவியல் கழகத்தின் ஒளியியல் மற்றும் துல்லிய இயந்திரவியல் ஆய்வு நிறுவனத்தின் அறிவுசார் சொத்துரிமை இயக்கப் பிரிவுத் தலைவர் சாவ் ஹுய்டாவ் பேசுகையில்

தற்போது, உலகளவில் இன்னும் 390 கோடி மக்களுக்கு இணையச் சேவை கிடைக்கவில்லை. இந்த எண்ணிக்கையைக் கேட்டபோது மக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, ஏன்? என்ற கோள்வியையும் எழுப்பினார்கள். உண்மையாக, தொழில் நிறுவனங்கள் ஓர் இடத்தில் தொலைத் தொடர்பு கோபுரத்தை கட்டியமைக்கும் போது, முதலீட்டினால் ஈட்டப்படும் லாபத்தின் விகிதத்தை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, மக்கள் தொகை குறைவாக இருக்கும் பாலைவனம் போன்ற இடங்களில், தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்டுவதில்லை.ஆனால், சில சிறப்பான தொழில்களுக்கு இணையச் சேவை மிகவும் அவசியம். இதனால்,“வான் கோபுரம்” என்ற இணைய வசதி அளிக்கும் எண்ணம் உருவானது. அதன் மூலம், கண்டங்களையும் பெருங்கடல்களையும் இணைத்து எங்கும் இணையச் சேவை அளிக்க திட்டமிட்டுள்ளோம். இத்தைகய திட்டங்களை, பல வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்கள் செயல்படுத்தியுள்ளன. சீனாவின் தொழில் நிறுவனங்கள் இதுவரை இதனைச் செயல்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

ஜியுத்தியன்வெய்சிங் நிறுவனம், சிஆன் நகரத்திலுள்ள சீன அறிவியல்

கழகத்தின் ஒளியியல் மற்றும் துல்லிய இயந்திரவியல் ஆய்வு நிறுவனத்தின் முதலீட்டினால் இயக்கப்பட்டு வரும் விண்வெளிச் சேவை நிறுவனமாகும். தற்போது, விண்வெளி இணையத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 2018ஆம் ஆண்டின் பிற்பாதியில் ஒரே முயற்சியில் 7 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும். இது பற்றி சாவ் ஹுய்சாட் கூறியதாவது

7 செயற்கைக் கோள்கள் அனைத்தும்,வணிக ரீதியாக பயன்படுத்தப்படும். இது வரை, 5 கோள்கள் விற்கப்பட்டுள்ளன. ஒன்று, ஓ.எப்.ஓ நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது. ஷாவ்நியன்சிங் இரண்டு எனும் செயற்கைக் கோள், துவக்க மற்றும் நடு நிலை பள்ளிகளுக்கு விண்வெளி அறிவியல் பரப்புரை மற்றும் விண்வெளி ஆய்வுச் சோதனைக்கு பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

 

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்