பெய்தொவ் புவியிடங்காட்டி செயற்கைக் கோள்கள் ஏவுதல்

வான்மதி 2018-03-30 10:30:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெய்தொவ் புவியிடங்காட்டி செயற்கைக் கோள்கள் ஏவுதல்

சீனாவின் 30 மற்றும் 31ஆவது பெய்தொவ் புவியிடங்காட்டி செயற்கைக் கோள்கள் 30ஆம் நாள் அதிகாலையில் சீ ட்சாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-3பி ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

ஒரே தடவையில் ஏவப்பட்ட இவ்விரு செயற்கைக் கோள்கள், பெய்தொவ் புவியிடங்காட்டி பிணையத்தில் சேர்க்கப்படும் 7ஆவது மற்றும் 8ஆவது செயற்கைக் கோள்களாகும். 3 மணிக்கு மேலான பறத்தலுக்குப் பின் அவை திட்டமிட்டப்பட்ட சுற்றுவட்டப் பாதையில் நுழைந்துள்ளன. சோதனைக்குப் பிறகு அவை முன்பு ஏவப்பட்ட 6 செயற்கைக் கோள்களுடன் இணைந்து பிணையத்தை உருவாக்கி இயங்கும்.

திட்டப்படி, பெய்தொவ் புவியிடங்காட்டி செயற்கைக் கோள் தொகுதி இவ்வாண்டின் இறுதிக்குள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்குச் சேவைபுரியும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்