சந்திரனின் பின்புறம் தொடர்பான சீனாவின் ஆய்வுத் திட்டம்

2018-04-24 15:34:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

"சாங்ஏ-3" சந்திரன் ஆய்வு விண்கலன்

"சாங்ஏ-3" சந்திரன் ஆய்வு விண்கலன்

ஏப்ரல் 24ஆம் நாளான இன்று, சீனாவில் மூன்றாவது சீன விண்வெளித் தினமாகும். இவ்வாண்டு சாங்ஏ-4 எனும் ஆய்வுத் திட்டத்தில் இரண்டு முக்கிய  பணிகள் நிறைவேற்றப்படும் என்று சீனத் தேசிய விண்வெளி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஊ யான்ஹுவா விண்வெளித் தினத்தை முன்னிட்டு தெரிவித்தார்.

சாங்ஏ–4 திட்டம், இவ்வாண்டு சீன விண்வெளித் துறையில் முக்கியப் பணிகளில் ஒன்றாகவும்,  உலக விண்வெளித் துறை கவனம் செலுத்தும் நிகழ்வாகவும் திகழ்கிறது. இத்திட்டத்தைச் சேர்ந்த ஒரு பகுதியாக, கியுச்சியாவ் எனும் செயற்கைக் கோள் ஒன்று வரும் மே திங்களில் விண்ணில் செலுத்தப்படும். மற்றொரு பகுதியாக, சாங்ஏ-4 ஆய்வு விண்கலன் இவ்வாண்டின் இறுதியில் ஏவப்படும். இந்த ஆய்வு விண்கலன், மனித வரலாற்றில் முதல்முறையாக சந்திரனின் பின்புறத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்