செவ்வாய் கிரக ஆய்வுக்கு அமெரிக்காவின் விண்கலன் ஏவுதல்

வான்மதி 2018-05-06 16:14:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செவ்வாய் கிரக ஆய்வுக்கு அமெரிக்காவின் விண்கலன் ஏவுதல்

நாசா எனும் அமெரிக்க தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி ஆய்வு நிர்வாகம் 5ஆம் நாள் கலிஃபோர்னியா மாநிலத்தின் மையப் பகுதியில் செவ்வாய் கிரக ஆய்வுக்கான InSight எனும் ஆளில்லா ஆய்வு கலத்தைச் செலுத்தியது. செவ்வாய் கிரகத்தின் ஆழமான உட்புறத்திலுள்ள இரகசியம் பற்றி முதன்முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. செவ்வாய் கிரக உட்கருவின் அளவு, சேர்மங்கள், இயற்பியல் நிலைமை, நிலவியல் கட்டமைப்பு, செவ்வாய் கிரகத்தின் உட்புற தட்பவெப்ப நிலை, நிலநடுக்கம் உள்ளிட்டவை பற்றி இந்த ஆய்வு கலத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்