பயன்பாட்டுக்கு வந்துள்ள ஃபெங்யூன்-4 ஏ வானிலை துணைக் கோள்

வாணி 2018-05-08 10:44:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஃபெங்யூன்-4 ஏ எனும் வானிலை முன் அறிவிப்புக்கான துணைக் கோள் மே 8ஆம் நாள் முதல் ஆசிய பசிபிக் பிரதேசத்துக்குச் சேவை புரிய துவங்கியுள்ளதாகச் சீன வானிலைப் பணியகம் தெரிவித்துள்ளது.

காற்று, மேகம், மணல், மழை பொழிவு, கதிர் வீச்சு, மின்னல் உள்ளிட்ட 23 துறைகள் தொடர்பான தரவுகளை வழங்குவதன் மூலம் வானிலை முன்னறிவிப்பு, இயற்கை சீற்றத்துக்கான முன்னெச்சரிக்கை ஆகிய சேவையை இந்தச் துணைக்கொள் வழங்கும்.

தற்போது, உலகளவில் ஐரோப்பா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய 4 பிரதேசங்கள் மட்டுமே புவிநிலைச் சுற்றுவட்டப் பாதையில் இயங்கும் வானிலை துணைக்கோள் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளன. சீனா மற்றும் ஜப்பான் செலுத்திய துணைக்கோள்கள் முக்கியமாகக் கிழக்கு அரைக்கோளப் பரப்பில் வானிலை கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்