சீனாவின் உயர் பிரிதிறனுடைய செயற்கை கோள்

தேன்மொழி 2018-05-09 11:45:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் உயர் பிரிதிறனுடைய செயற்கை கோள்

சீனாவின் உயர் பிரிதிறனுடைய செயற்கை கோள்

கொ ஃபென்-5 எனும் செயற்கை கோள், மே 9-ஆம் நாள் சீனாவின் ஷான் சி மாநிலத்தின் தை யுவான் செயற்கை கோள் ஏவு மையத்திலிருந்து, லாங் மார்ச் 4சி ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஒரேயொரு அதி நிறமாலை பிரிதிறனுடைய இச்செயற்கைகோள், சீனாவின் உயிரின வாழ்க்கை சூழல் கண்காணிப்பு, நாட்டின் நில மற்றும் மூலவள ஆய்வு, வானிலை ஆய்வு உள்ளிட்ட பல துறைகளில், முக்கியமாக பயன்படுத்தப்படும். வெளிநாடுகள் வழங்கும் அதி நிறமாலைத் பிரித்திறனுடன் தொடர்புடைய தரவுகளுக்குப் பதிலாக, இது சீனாவின் பல்வேறு வாரியங்களுக்கு சேவை புரிவது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் உயர் பிரிதிறனுடைய செயற்கை கோள்

சீனாவின் உயர் பிரிதிறனுடைய செயற்கை கோள்

உயர் பிரிதிறன் மூலம் பூமியை நோக்கி ஆய்வு மேற்கொள்வதற்கான திட்டப்பணி ஒன்று, சீனாவில் சீராக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நவீன வேளாண்மை, பேரிடர் பாதிப்புக் குறைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலிய துறைகளில் சேவை புரிவதற்காக, இத்திட்டப்பணி உருவாக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு முதல், இத்திட்டப்பணிக்கென செயற்கை கோள்கள் அடுத்தடுத்து விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த முறையில் செலுத்தப்பட்ட கொ ஃபென்-5 செயற்கை கோள், 6 தொலை உணர்வறிச் சாதனங்களைச் சுமந்து சென்றது. இந்த 6 தொலை உணர்வறிச் சாதனங்கள் மூலம், உள்நாட்டு நீர் வளம், நிலத்தடி உயிரின சூழல், கனிமவளம், காற்று மாசுபாட்டு வாயு, பசுங்கூடவாயு முதலியவை மீது பன்நோக்க தன்மை வாய்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

இது குறித்து, சீன உயிரின சூழல் அமைச்சகத்தின் அதிகாரி வாங் ஜியாவ் கூறுகையில், கொ ஃபென்-5 எனும் செயற்கை கோள், சீனாவில் உயர் பிரிதிறன் மூலம் தரையை நோக்கி ஆய்வு மேற்கொள்ளும் செயல்திறனின் அதிகரிப்பை காட்டுகின்றது என்றார்.

இச்செயற்கை கோள் செலுத்தப்பட்டற்கு முன்பாக, சீனாவின் செயற்கை கோள், மண்டலத்திலுள்ள காற்று மாசுப்பட்டு நிலைமையைக் கண்காணிப்பதற்கு பயனுள்ள தரவுகளை வழங்க முடியாது. தற்போது, கொ ஃபென்-5 செயற்கை கோள் இத்துறையின் வெற்றிடத்தை நிரப்பியுள்ளது. சீனாவின் காற்று மாசுபாட்டு நிலைமையை நேரிடையாக கண்காணிப்பதற்கும், சீனாவின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தின் நடைமுறையாக்கத்துக்கும் இது முக்கிய பங்காற்றும் என்று வாங் ஜியாவ் தெரிவித்தார்.

இது வரை, இந்தப் புவிக்கண்காணிப்புத் திட்டப்பணிக்கென செலுத்தப்பட்ட செயற்கை கோள்கள் மூலம் பெற்றுள்ள தரவுகள், சீனாவின் 30 மாநிலங்களிலும், 20க்கும் அதிகமான துறைகளிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதோடு, இத்திட்டப்பணி, சர்வதேச ஒத்துழைப்பை முன்னேற்றி வருகின்றது. ரஷியா, பிரேசில், எகிப்து, இந்தியா முதலிய நாடுகளுடன், விண்வெளிப் பயண ஆய்வு பற்றிய ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் சீனா கையொப்பமிட்டதற்கு இது முக்கியப் பங்காற்றியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்