சீன விண்வெளி நிலையத்தைப் பயன்படுத்தி சர்வதேச ஒத்துழைப்பு மேற்கொள்ளும் வாய்ப்பு பற்றிய அறிக்கை

பூங்கோதை 2018-05-29 18:21:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன விண்வெளி நிலையத்தைப் பயன்படுத்தி சர்வதேச ஒத்துழைப்பு மேற்கொள்ளும் வாய்ப்பு பற்றிய அறிக்கை

சீன விண்வெளி நிலையம் 2022ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, இயக்கப்பட உள்ளது. சீன விண்வெளித் துறையில் மற்றொரு மைல் கல் இதுவாகும். இந்நிலையில், சீன விண்வெளி நிலையத்தைப் பயன்படுத்தி சர்வதேச ஒத்துழைப்பு மேற்கொள்ளும் வாய்ப்பு பற்றிய அறிக்கை மே 28ஆம் நாள் வியன்னாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அனைத்து நாடுகள், அமைப்புகள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கும், சீன விண்வெளி நிலையம் திறந்து வைக்கப்படும். அத்துடன், உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த அறிஞர்கள் இந்நிலையத்தில் ஆய்வு மற்றும் சோதனைகளை மேற்கொள்ளும் வாய்ப்பையும் பெறலாம் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியன்னாவிலுள்ள ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஷீ ட்சொங் ஜூன் பேசுகையில், உலகின் பல்வேறு நாடுகள் சீன விண்வெளி நிலையத்தின் மூலவளங்களைப் பயன்படுத்த முடியும். சீன விண்வெளி நிலையம்,  வெளிநாடுகளுக்குத் திறந்து வைக்கப்பட்டு, வெளிப்படையாக சேவையாற்றும். இது மனித குலத்துக்கு நன்மை புரியும் என்றார் அவர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்