சீனாவின் ஏவூர்தி மூலம் இரு பாகிஸ்தான் செயற்கை கோள்கள் ஏவுதல்

தேன்மொழி 2018-07-09 15:12:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானின் 1 இலக்க தொலை உணர்வறிச் செயற்கைக் கோள் மற்றும் பாக்டெஸ்-1ஏ எனும் அறிவியல் ஆய்வு செயற்கைக்கோள் ஆகியவை, ஜுலை 9-ஆம் நாள் முற்பகல், சீனாவின் ஜியு ட்சுவன் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து, லாங்மார்ச்-2சி ஏவூர்தி மூலம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இவ்விரு செயற்கைக் கோள்களும், வெற்றிகரமாக திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நுழைந்துள்ளன.

திட்டப்படி, பாகிஸ்தானின் 1இலக்க தொலை உணர்வறிச் செயற்கைக் கோள், அந்நாட்டு நிலம் மற்றும் மூலவளத்தின் ஆராய்ச்சி மற்றும் அளவீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை சீற்றங்களுக்கான முன்னச்சரிக்கை, விவசாய பயிர்களின் வளர்ப்பு , நகரக் கட்டுமானத் திட்ட வரைவு முதலிய துறைகளில் பயன்படுத்தப்படும். மேலும், சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆகியவற்றுக்கும், இது தொலை உணர்வறிச் சேவையை வழங்கும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்