ஷாங்காயில் உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாடு துவக்கம்

மதியழகன் 2018-09-17 16:03:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காயில் உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாடு துவக்கம்

2018ஆம் ஆண்டு உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாடு செப்டம்பர் 17ஆம் நாள்  முதல் 19ஆம் நாள் வரை சீனாவின் ஷாங்காயில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், இந்த மாநாட்டின் துவக்கத்திற்கு வாழ்த்து கூறுவதோடு, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள்,  நிபுணர்கள், அறிஞர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களின் பங்கேற்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஷாங்காயில் உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாடு துவக்கம்

பல்வேறு நாடுகளுடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சியை முன்னெடுத்து, பாதுகாப்பை பேணிக்காத்து, சாதனைகளைப் பகிர்ந்து கொள்ள சீனா விரும்புவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷாங்காயில் உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாடு துவக்கம்

இம்மாநாட்டில், 40 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அறிஞர்கள், வல்லுநர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் முன்னிலை செயற்கை நுண்ணிறவுத் தொழில் நுட்பம், தொழில் வளர்ச்சிப் போக்கு, சூடான அம்சங்கள் ஆகியவை பற்றி பேச்சுவார்த்தை மேற்கொண்டு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்