நீரிலிருந்து பறக்கும் AG600 விமானத்தின் முதல் சோதனை வெற்றி

பூங்கோதை 2018-10-20 15:31:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நீரிலிருந்து பறக்கும் AG600 விமானத்தின் முதல் சோதனை வெற்றி

சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த நிலம் நீர் ஆகிய இருவழிகளில் இயங்க கூடிய AG600 என்னும் விமானம், நீர் பரப்பிலிருந்து பறக்கும் முதலாவது சோதனை பயணம் அக்டோபர் 20ஆம் நாள் ஹூபெய் மாநிலத்திலுள்ள ட்சாங் ஹே விமான நிலையத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், வாழ்த்து செய்து அனுப்பினார். மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், தலைமையமைச்சருமான லீ கெச்சியாங் இதற்கு கருத்துரை எழுதி வாழ்த்து தெரிவித்தார்.

நீரிலிருந்து பறக்கும் AG600 விமானத்தின் முதல் சோதனை வெற்றி

சீனப் பயணியர் விமான சேவைக்கான விதி முறைக்கிணங்க, சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த முதலாவது சிறப்பு விமானம் இதுவாகும். உலகளவில் நிலம் நீர் ஆகிய இருவழிகளில் இயங்க கூடிய மிகப் பெரிய விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. காட்டுத் தீயணைப்பு, நீர் பரப்பில் மீட்புதவி, கடல் சுற்றுச்சூழலுக்கான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இவ்விமானம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிலிருந்து பறக்கும் AG600 விமானத்தின் முதல் சோதனை வெற்றி


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்