பெய்தொவ் அமைப்புக்கான செற்கைக் கோள்களின் வெற்றிகரமான ஏவுதல்

வான்மதி 2018-11-19 09:31:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெய்தொவ் அமைப்புக்கான செற்கைக் கோள்களின் வெற்றிகரமான ஏவுதல்

பெய்தொவ் புவியிடங்காட்டி அமைப்புக்கான 42ஆவது மற்றும் 43ஆவது செயற்கைக் கோள்கள் 19ஆம் நாள் திங்கள்கிழமை அதிகாலை சீனாவின் சீசாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-3 பி ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. ஒரே ராக்கெட் இரண்டு செயற்கைக் கோள்கள் என்ற முறையில் செலுத்தப்பட்ட இவ்விரு செயற்கைக் கோள்கள், பெய்தொவ்-3 தொகுதிக்கான 18ஆவது மற்றும் 19ஆவது செயற்கைக் கோள்களாகும்.

3 மணிநேரத்துக்கும் மேலான பறத்தலுக்குப் பிறகு, இவ்விரு செயற்கைக் கோள்களும் திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் தடையின்றி நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

சீனாவின் பெய்தொவ்-3 தொகுதியின் நட்சத்திர மண்டலப் பரவல் இனிதே நிறைவேற்றப்பட்டுள்ளதை இந்த வெற்றி காட்டுகிறது. அடுத்ததாக தொடர்புடைய சோதனை மற்றும் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்