2030ஆம் ஆண்டுக்குப் பிறகு சந்திரனுக்கு வீரர்களை அனுப்ப ரஷியா திட்டம்

மதியழகன் 2018-11-21 11:04:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ரஷியாவின் சந்திரன் தளக் கட்டுமானத்  திட்டம் நவம்பர் 19ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி, இத்திட்டத்தின் முக்கியப் பகுதியாக, ரஷியாவின் விண்வெளி வீரர்கள் 2030ஆம் ஆண்டுக்குப் பிறகு சுந்திரனைச் சென்றடைவர்.

அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தின் 20ஆவது ஆண்டு நிறைவுத் தொடர்பான நினைவு நிகழ்ச்சியில், ரஷியாவின் ஏவூர்தி மற்றும் விண்வெளி ஆற்றல் நிறுவனம் இத்திட்டத்தை அறிவித்துள்ளது.

ரஷியாவின் சந்திரன் தளக் கட்டுமானப் பணி மூன்று கட்டங்களாக நடைபெறும் என்றும் விண்வெளி வீரர்கள் சந்திரனில் 14 நாட்களுக்கு தங்கி இருப்பார்கள் என்றும் ஏவூர்தி மற்றும் விண்வெளி நிறுவனத்தின் முதுநிலை மேலாளரின் கூற்றை மேற்கோள் காட்டி, டாஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்