பெய்தாவ்-3 என்னும் தொகுதியின் கட்டுமானம் நிறைவேற்றம்

பூங்கோதை 2018-12-27 16:23:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெய்தாவ்-3 என்னும் தொகுதியின் கட்டுமானம் நிறைவேற்றம்

பெய்தாவ் வழிக்காட்டுச் செயற்கைக் கோள் தொகுதியின் செய்தித் தொடர்பாளர் ரான் ச்செங்ச்சீ டிசம்பர் 27ஆம் நாள் பெய்ஜிங்கில் பேசுகையில், சீனாவின் பெய்தாவ்-3 என்னும் தொகுதியின் கட்டுமானம் நிறைவேற்றப்பட்டு, 27ஆம் நாள் உலகத்துக்குச் சேவை அளிக்கத் துவங்கியது. பெய்தாவ் வழிக்காட்டுச் செயற்கைக் கோள் தொகுதியின் சேவை, பிரதேசத்திலிருந்து முழு உலகத்துக்குப் பரவல் செய்யப்பட்டுள்ளதை இது கோடிட்டுக்காட்டுகிறது என்றார்.

திட்டத்தின்படி, 2019 முதல் 2020ஆம் ஆண்டு வரை, 11 பெய்தாவ்-3 செயற்கைக் கோள்களையும், ஒன்று பெய்தாவ்-2 செயற்கைக் கோளையும் சீனா செலுத்தும். ஆசிய-பசிபிக் பிரதேசத்திலுள்ள சேவையை வலுப்படுத்தும் அதேவேளையில், உலகத்திலுள்ள சேவையையும் உயர்த்தும். மேலும், 2020ஆம் ஆண்டுக்குள், பெய்தாவ்-3 செயற்கைக்கோள் வலையமைப்பு பன்முகங்களிலும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்