சந்திரனின் மறுபக்கத்தில் பாதுகாப்பாக தரையிறங்கிய சீனா விண்கலம்

மதியழகன் 2019-01-03 14:23:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சந்திரனின் மறுபக்கத்தில் பாதுகாப்பாக தரையிறங்கிய சீனா விண்கலம்

சந்திரன் ஆய்வுக்காக சீனா அனுப்பிய சாங்ஏ-4 எனும் விண்கலம், 2019ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் நாள் காலை 10.26 மணிக்கு, சந்திரனின் மறுபக்கத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

சந்திரனின் மறுபக்கத்தில் பாதுகாப்பாக தரையிறங்கிய சீனா விண்கலம்

இதைத் தொடர்ந்து, ச்சுயெஜியாவ் எனும் செயற்கைக் கோள் மூலம், உலகிலேயே முதன்முறையாக சந்திரனின் பின்புறக் காட்சி படம் பிடிக்கப்பட்டு, அந்நிழற்படம் புவிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மனித வரலாற்றில் ஆய்வு விண்கலம் சந்திரனின் மறுபக்கத்தில் பாதுகாப்பான முறையில் தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும். இது, சந்திரன் ஆய்வுத் துறையில் புதிய அத்தியாத்தை திறந்து வைத்துள்ளது.

சந்திரனின் மறுபக்கத்தில் பாதுகாப்பாக தரையிறங்கிய சீனா விண்கலம்

சாங்ஏ- 4 விண்கலம், தரையிறங்கும் கருவி மற்றும் உளவி ஆகிய இரண்டு முக்கிய பகுதிகளால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். பின்னர், உளவி, சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வுப் மேற்கொள்ளும்.

சாங்ஏ-4 விண்கலம், சீன மற்றும் வெளிநாட்டு அறிவியலாளர்களுக்கு விண்வெளி ஆய்வு வாய்ப்புகளை அளிக்கும். இந்த விண்கலம் தரையிறங்கிய பகுதியில், 6000 மீட்டர் ஏற்றத்தாழ்வு மிக்க நிலப்பரப்பு காணப்படுகிறது. சந்திரன் மற்றும் சூரிய மண்டலத்தின் ஆரம்ப கால வரலாற்றை ஆய்வு செய்வதற்கு இப்பகுதி மிகுந்த மதிப்பு வாய்ந்தது எனத் தெரிகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்