“சாங் ஏ-4” விண்கலத்தின் ஆய்வுத் திட்டம் வெற்றி!

மதியழகன் 2019-01-12 16:47:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

“சாங் ஏ-4” விண்கலத்தின் ஆய்வுத் திட்டம் வெற்றி!

சீனாவின் சந்திரன் ஆய்வுத் திட்டத்தைச் சேர்ந்த “சாங் ஏ-4” விண்கலம் ஜனவரி 11ஆம் நாள் மாலை நல்ல செய்தி தந்துள்ளது. தரையிறங்கும் இயந்திரம் மற்றும் யுட்டு-2 ஆய்வு ஊர்தி ஆகியவை, ஒன்றுக்கொன்று புகைப்படம் எடுத்து, புவிக்கு படங்களை அனுப்பியுள்ளன. இந்நிலையில், “சாங் ஏ-4” விண்கலத்தின் ஆய்வுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

“சாங் ஏ-4” விண்கலத்தின் ஆய்வுத் திட்டம் வெற்றி!

இதற்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, சீன அரசவை, சீன மத்திய இராணுவ ஆணையம் ஆகியவை வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளன.

இந்த வாழ்த்துச் செய்தியில், பரந்த அண்டத்தை ஆய்வு மேற்கொண்டு, விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவது, முழு மனித குலத்தின் பொதுவான கனவாகும். சீனாவின் சந்திரன் ஆய்வுத் திட்டத்தின் 4ஆவது காலக் கட்டப் பணி மற்றும் விண்வெளி ஆய்வுத் திட்டம் பன்முகமாக தொடங்கும். எதிர்காலத்தில், கடமைகள் மேலும் கடினமாக இருக்கும். முன்பு இல்லாத அறைகூவல்களை எதிர்கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்