GF-7 செயற்கைக் கோள் ஏவுதல் வெற்றி

2019-11-03 17:02:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெய்ஜிங் நேரப்படி நவம்பர் 3ஆம் நாள் 11 மணி 22 நிமிடத்தில் சீனாவின் தையூவான் செயற்கை ஏவு மையத்திலிருந்து GF-7 செயற்கைக் கோள் லாங்மார்ச்-4பி ஏவூர்தி மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதற்குப் பிறகு இந்தச் செயற்கைக் கோள் தடையின்றி திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது.

GF-7 செயற்கைக் கோள், சீனாவில் குடிமுறை பயன்பாட்டுக்கான முதலாவது துணை மீட்டர் நிலை ஒளி பரப்பு ரக முப்பரிமான வரைபடச் செயற்கைக் கோளாகும். தேசிய நிலப்பரப்பு அளவீடு மற்றும் வரைப்படம், நகர மற்றும் கிராமக் கட்டுமானம், புள்ளிவிவரம் மற்றும் ஆய்வு உள்ளிட்ட துறைகளில் இச்செயற்கைக் கோள் முக்கிய பங்கினை அளித்து, நகரங்களின் வளர்ச்சி திட்ட வரைவு, வேளாண்மை மற்றும் கிராமப்புறக் கட்டுமானம் ஆகியவற்றுக்கு வலிமைமிக்க உத்தவாரத்தை வழங்கும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்