செவ்வாய்க் கிரக ஆய்வுக்கான சீனாவின் கடமை

பூங்கோதை 2019-11-14 16:15:38
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செவ்வாய்க் கிரக ஆய்வுக்கான சீனாவின் கடமை நவம்பர் 14ஆம் நாள் முதன்முறையாக வெளியிடப்பட்டது. ஹேபெய் மாநிலத்திலுள்ள ஒரு தளத்தில் தரையிறங்கி விண்வெளியில் நிறுத்துவது, தடைகளில் இருந்து தப்பிப்பது உள்ளிட்டவை குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இத்தளம், புவிக்கு அப்பாலுள்ள வான் பொருட்களில் தரையிறங்கும் சோதனைக்கான ஆசியாவின் மிகப் பெரிய பரிசோதனைத் தளமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க் கிரக ஆய்வுக்கான சீனாவின் முதலாவது கடமை 2020ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும். செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிப் பார்ப்பது, செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குவது, செவ்வாய்க் கிரகத்தின் மீது உலகப் பன்நோக்கப் பரிசோதனையை நடத்துவது முதலியவை, இக்கடமையின் நோக்கத்தில் இடம்பெறுகின்றன.

பிரான்ஸ், இத்தாலி, பிரேசில் உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த சீனாவுக்கான தூதர்கள், சீனாவுக்கான ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தூதாண்மை குழுவினர்கள், ஆசியா-பசிபிக் விண்வெளி ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகள், சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் உள்ளிட்ட 70 பேர் இப்பரிசோதனையைப் பார்த்தனர். சர்வதேச விண்வெளிப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளைச் சீனா பயன்தரும் முறையில் மேற்கொள்ளும் ஒரு முக்கிய நடவடிக்கை இதுவாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்