​பெய் தொவ் புவியிடங்காட்சி அமைப்பின் முக்கிய முன்னேற்றம்

தேன்மொழி 2019-12-17 15:24:24
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் சி ட்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து, பெய் தொவ் புவியிடங்காட்டி அமைப்பைச்(பிடிஎஸ்) சேர்ந்த இரண்டு செயற்கைகோள்கள் லாங்மார்ச்-3பி ஏவூர்தி மூலம் டிசம்பர் 16-ஆம் நாள் பிற்பகல் 3:22 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

தற்போதுவரை, பெய் தொவ் புவியிடங்காட்சி அமைப்பைச் சேர்ந்த 24 நடுத்தர புவி சுற்றுவட்டப்பாதைச் செயற்கைக்கோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளன. பெய்தொவ்-3 தொகுதியில் மையப் பங்காற்றும் செயற்கைக்கோள்களைப் பரவல் செய்யும் பணியும் நிறைவுபெற்றுள்ளது.

பிடிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் பெய்தொவ் புவியிடங்காட்சி அமைப்பு, உலகளவில் பயனாளர்களுக்குத் தலைசிறந்த சேவையை வழங்கும் என்று இவ்வமைப்பின் தலைமை வடிவமைப்பாளர் யாங் ட்சாங் ஃபெங் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்