விண்வெளி துறையில் சீனாவின் மாபெரும் முன்னேற்றம்

பூங்கோதை 2019-12-20 16:39:15
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தியான் ச்சின்-1 என்னும் சீனாவின் முதலாவது ஈர்ப்பு அலைக்கான ஆய்வு செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுவதை முன்னிட்டு, பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை, தியான் ச்சின் குழு லேசர் பயன்படுத்தி கச்சிதமாக அளவிட்டுள்ளது. இத்தகைய அளவீட்டில் வெற்றி பெற்ற 5வது நாடாகச் சீனா விளங்குகிறது. அத்துடன், சந்திரனின் மேற்புறத்தில் அமைக்கப்பட்ட 5 சந்திர லேசர் பிரதிபலிப்பிகளின் எதிர் சமிக்கையை இக்குழு பெற்றுள்ளது. உலகளவில் 5 சந்திர லேசர் பிரதிபலிப்பிகளின் எதிர் சமிக்கையை அனைத்தையும் பெற்றுள்ள 3வது நாடாகச் சீனா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில், விண்வெளி ஈர்ப்பு அலைக்கான ஆய்வுத் திட்டப்பணிக்கு இச்சாதனை சிறந்த அடிப்படையை உருவாக்கியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்