சீனாவின் ஜீலின்-1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது

பூங்கோதை 2020-01-15 16:22:35
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜனவரி 15ஆம் நாள் முற்பகல் 10 மணி 53 நிமிடத்தில், ஜீலின்-1 என்னும் வணிகப் பயன்பாட்டிற்கான ஒளியியல் தொலை உணர்வறி செயற்கைக்கோள் ஒன்று, லாங்மார்ச்-2டி ஏவூர்தியின் மூலம், சீனாவின் தாய்யூவான் செயற்கை கோள் ஏவு மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தச் செயற்கை கோள் திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் தடையின்றி நுழைந்துள்ளது.

லாங்மார்ச் ஏவூர்திகள் தொகுதியின் 325வது விண்வெளி பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்