10Gbps திறனுடைய முதலாவது செயற்கைக் கோள் ஏவுதல் வெற்றி

வான்மதி 2020-01-16 16:50:31
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜனவரி 16ஆம் நாள் முற்பகல் 11 மணி 2 நிமிடத்தில், சீனாவின் முதலாவது 10Gbps திறனுடைய அகன்ற அலைவரிசை தகவல் தொடர்பு செயற்கைக் கோள், KZ-1A ஏவூர்தி மூலம் ஜியூச்சுவன் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, திட்டமிடப்பட்ட சுற்று வட்டப் பாதையில் தடையின்றி நிலைநிறுத்தப்பட்டது.

சர்வதேச அளவில் முன்னிலையை எட்டியுள்ள இந்தச் செயற்கைக் கோள், பெய்ஜிங்கில் தலைமையகத்தை அமைத்துள்ள கேலக்ஸி ஸ்பேஸ்(Galaxyspace) நிறுவனத்தால் சொந்த ஆய்வு மூலம் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்