பெய்தொவ் செயற்கைக் கோள்களைச் சீனா செலுத்தும்

பூங்கோதை 2020-02-24 16:05:04
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனச் செயற்கைக் கோள் புவியிடங்காட்டி பணியகம் பிப்ரவரி 23ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் மார்ச் மற்றும் மே திங்கள், பெய்தொவ்-3 வலையமைப்புச் செயற்கைக் கோள்களைச் சீனா கடைசி 2 முறைகளாக விண்ணில் செலுத்தி, பெய்தொவ் புவியிடங்காட்டி முறைமையின் உலக வலையமைப்புப் பணியை நிறைவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன், லாங்மார்ச்-3பி ஏவூர்தி, பிப்ரவரி 14ஆம் நாள், சிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்தைத் திட்டத்தின்படி சென்றடைந்தது. அதனையும் பெய்தொவ் செயற்கைக்கோள்களையும் பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 15ஆம் நாள், பெய்தொவ் புவியிடங்காட்டி முறைமையைச் சேர்ந்த 41, 49, 50 மற்றும் 51வது செயற்கைக்கோள்களின் சுற்று வட்டப் பாதையிலுள்ள பரிசோதனை முடிவடைந்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்