தடுப்பூசியில் புதிய முன்னேற்றம்:சீனாவில் மருத்துவச் சோதனைக்கு அனுமதி

வான்மதி 2020-04-14 12:34:05
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசவையின் கூட்டுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயங்குமுறையைச் சேர்ந்த அறிவியல் ஆய்வுக் குழுவிலிருந்து கிடைத்த தகவலின்படி, புதிய ரக கரோனா வைரஸுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள 2 வகை தடுப்பு மருந்துகளுக்கு மருத்துவச் சோதனைக்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய சோதனை உடனுகுடன் தொடங்கப்பட்டது. மருத்துவச் சோதனைக்கு ஒப்புதல் பெற்றுள்ள முதல் தொகுதி வைரஸை அழித்து தடுப்பாற்றலை அதிகரிக்கும் தடுப்பூசிகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு தடுப்பூசி மிக முக்கியமானது. கொவைட்-19 நோய் தொற்று ஏற்பட்ட பிறகு, சீனாவில் அறிவியல் ஆய்வுக்கான சிறப்பு குழு உருவாக்கப்பட்டு, 12 ஆய்வுப் பணிகள் வகுக்கப்பட்டன. தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிதானமாக முன்னேறி வருகின்றன.
இதற்கு முன், இராணுவ அறிவியல் கழகத்தைச் சேர்ந்த மருத்துவயியல் ஆய்வகம் ஆராய்ந்து உருவாக்கிய அடினோவைரஸ் கொண்ட தடுப்பூசி மருத்துவச் சோதனைக்கான ஒப்புதலைப் பெற்றது நினைவுகூரத்தக்கது.
மருத்துவச் சோதனைக்கு வந்துள்ள புதிய தடுப்பூசி, நோய் விளைவிக்கும் நுண்ணுயிரியைக் கொல்லும், அதேசமயம் நோய் தடுப்பு தன்மையை நிலைநிறுத்தும். பெருமளவில் பயன்படுத்தப்படக் கூடிய இந்த வகை தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையும் வினைதிறனையும் சர்வதேச வரையறையின்படி சோதித்துப் பார்க்க முடியும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்