சீன விண்வெளி நிலையத்தின் முதலாவது ஏவுப்பணி வெற்றி

பூங்கோதை 2020-05-05 19:56:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn


மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டத்துக்கு தயாரிக்கப்பட்ட சீனாவின் லாங்மார்ச்-5பி ஏவூர்தி மே 5ஆம் நாள் ஹாய்நான் மாநிலத்தின் வென்ச்சாங் நகரில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டத்தின் 3வது கட்டப் பணி துவங்கியுள்ளது.


5ஆம் நாள் பிற்பகல் 6 மணிக்கு, லாங்மார்ச்-5பி ஏவூர்தி, மனிதரை ஏற்றிச்செல்லும் புதிய தலைமுறை விண்கலத்தையும், சரக்கு திரும்பு கலத்தையும் கொண்டு, சோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 488 வினாடிகளுக்குப் பின், இந்த இரு பகுதிகளும், ஏவூர்தியிலிருந்து பிரிந்து, வெற்றிகரமாக திட்டமிட்ட பாதையில் நுழைந்துள்ளன. சீன விண்வெளி நிலையத் திடத்தின் முதலாவது ஏவுப்பணி வெற்றி பெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி, சீன அரசவை, சீன மத்திய இராணுவ ஆணையம் ஆகியவை இதற்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்