சீன விண்வெளி நிலையத்திற்கு சர்வதேச ஒத்துழைப்பு

ஜெயா 2020-05-06 10:04:55
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் லாங் மார்ச் 5-பி ஏவூர்தி மே 5ஆம் நாள் மாலை 6 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. மனிதரை ஏற்றிச்செல்லும் சீனாவின் விண்வெளிப் பயண திட்டப்பணி, விண்வெளி நிலையத்தின் கட்டுமானக் காலத்தில் நுழைந்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளது. இது குறித்து இத்திட்டப்பணியின் தலைமை வடிவமைப்பாளர் சோ ஜியான்பிங் கூறுகையில், சீன விண்வெளி நிலையத்தின் சர்வதேச ஒத்துழைப்புத் திட்டப்பணி தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தற்போது, முதல் தொகுதியான சர்வதேச ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விண்வெளி வானியல், விண்வெளி உயிர் அறிவியல் மற்றும் உயிரினத் தொழில் நுட்பம் முதலிய 5 கண்டங்களைச் சேர்ந்த 17 நாடுகளின் 9 திட்டப்பணிகள் வெற்றிகரமாகச் இவற்றில் சேர்ந்துள்ளன. மனிதரை ஏற்றிச்செல்லும் சீனாவின் விண்வெளிப்பயணத் திட்டப்பணி, தற்சார்பு வளர்ச்சியிலிருந்து, சர்வதேச ஒத்துழைப்புக்கு மாறும் முக்கிய காலடி இதுவாகும் என்று கூறினார்.

மேலும் அறிவியல் மனிதகுலத்தின் பொது இலட்சியமாகும். விண்வெளியை அமைதியாகப் பயன்படுத்தும் கோட்பாட்டை சீனா பின்பற்றி, பரந்த சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்