சீனாவில் 5ஜி அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது

பூங்கோதை 2020-05-18 10:36:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2020ஆம் ஆண்டு உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூகத் தினத்துக்கான மாநாடு மே 17ஆம் நாள் இணைய வழியாக நடைபெற்றது. அப்போது சீனத் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் துணை அமைச்சர் ச்சென் ஸாவ்சியொங் பேசுகையில், சீனாவில் 5ஜி தொழில் நுட்பத்தின் பயன்பாடு விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 2 லட்சத்துக்கும் மேலான 5ஜி அடிப்படை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், சீனாவில் தொழிற்துறை இணையத்தின் வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. எண்ணியல் பொருளாதாரமும் சீரான வளர்ச்சியடைந்து வருகிறது. இவை, வளர்ச்சியை முன்னேற்றும் முக்கிய இயக்கு ஆற்றலாக விளங்குகின்றன என்று கூறினார்.

சீனா மொபைல் (China Mobile)தொழில் நிறுவனத்தின் துணை மேலாளர் காவ் தொங்ச்சிங் பேசுகையில், ஏப்ரல் திங்கள் இறுதி வரை, சீனாவில் சீனா மொபைல் சேவைக்கான அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 20 ஆயிரத்தை எட்டியுள்ளது. அவற்றில் 4ஜி அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 50 ஆயிரமாகும். 5ஜி அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து 40 ஆயிரமாகும். இவ்வாண்டு இறுதி வரை, சீனா மொபைல் சேவைக்கான 5ஜி அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டும் என்று கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்