2019ஆம் ஆண்டு அறிவியல் ஆய்வில் 2.17 இலட்சம் கோடி யுவான் ஒதுக்கீடு: சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம்

ஜெயா 2020-05-19 15:07:07
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

19ஆம் நாள் பிற்பகல் சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், அறிவியல் தொழில் நுட்ப அமைச்சர் வாங்சிகாங், நாட்டின் புத்தாக்கப் பணியை விரைவுப்படுத்தி, தரமிக்க வளர்ச்சிக்குத் துணை புரிவது பற்றி அறிமுகம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், 2019ஆம் ஆண்டு, சீனா முழுவதிலும் அறிவியல் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டுத் தொகை 2 இலட்சத்து 17 ஆயிரம் கோடி யுவானை எட்டி, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.19 விழுக்காடு வகிக்கிறது. அறிவியல் தொழில் நுட்ப பங்கு விகிதம் 59.5 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் மதிப்பீட்டின்படி, சீனாவின் புத்தாக்கக் குறியீட்டு எண், உலகில் 14ஆவது இடத்தில் உள்ளது என்று கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்