பிரிட்டனில் ஹுவாவெய் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்துக்கு அனுமதி

2020-06-28 15:02:18
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஹுவாவெய்யின் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தைக் கட்டியமைக்கும் திட்டப்பணியின் முதல் கட்ட திட்ட வரைவு நடப்பு வாரத்தில் உள்ளூர் அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

ஹுவாவெய் நிறுவனத்தின் பிரிட்டன் கிளையைச் சேர்ந்த பொது தொடர்பு பிரிவின் மேலாளர் பால் ஹரிசன் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், உலகளவில் ஃபோட்டோ எலக்ட்ரான் ஆய்வு மற்றும் வளர்ச்சியின் முன்னிலையை பிரிட்டன் எட்டுவதற்கு இம்மையம் துணைபுரியும் என்று தெரிவித்தார். மேலும், இம்மையத்துக்கு 100 கோடி பவுண்ட் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இது பிரிட்டனுக்கு ஊக்கமளிக்கும் செய்தி. அதோடு சுமார் 400 வேலை வாய்ப்புகளையும் ஹுவாவெய் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

பிரிட்டனின் தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சிக்கு ஹுவாவெய் ஆற்றியுள்ள பங்கினைப் பற்றி அவர் கூறுகையில், பிரிட்டனில் 20 ஆண்டுகளாக இயங்கி வரும் ஹுவாவெய், 3ஜி மற்றும் 4ஜி தொழில் நுட்ப பரவலுக்கும் 5ஜி தொழல் நுட்ப வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது என்று குறிப்பிட்டார்.

ஆனால் ஹுவாவெய் நிறுவனத்தை தடுக்கும் வகையில் அமெரிக்கா அண்மையில் பிரிட்டன் மீது நிர்ப்பந்தம் திணித்து வருகிறது. இது குறித்து ஹுவாவெய் நிறுவனத்தின் துணை தலைமை இயக்குநர் ட்சாங் குவோவெய் கூறுகையில், பிரிட்டனிலுள்ள இம்மையம் ஒளியிழை தொடர்பு தொழில் நுட்பமுடைய புதிய உற்பத்தியில் ஈடுபடும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டத்தை ஹுவாவெய் கருத்தில் கொண்டது. அமெரிக்கா அண்மையில் மேற்கொண்ட எந்த செயலுடனும் இது தொடர்பில்லை என்று சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்