இணையவழியில் 2020 உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு

வான்மதி 2020-07-10 16:24:46
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜுலை 9 முதல் 11ஆம் நாள் வரை 2020 உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெறுகிறது. 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விருந்தினர்கள் இணையவழி மூலம் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

பெருந்தரவுகளின் ஆதரவுடன் செயற்கை நுண்ணறிவு சார் புத்தாக்க நெறிமுறை(algorithm) வைரஸ் தடுப்பு மருந்துகளின் ஆய்வுக்கு ஆதரவளிக்கும். செயற்கை நுண்ணறிவு, 5ஜி, தகவல் மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் விரைவான ஒன்றிணைப்பு, பொருளாதார மீட்சிக்கு அறிவாற்றலைக் கொண்டு வரும்.

கடந்த ஆண்டின் இறுதிவரை, சீனாவில் மையமான செற்கை நுண்ணறிவு தொழிலின் மதிப்பு 5100 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் சீனாவைத் தவிர, உலகிலுள்ள பல நாடுகள் மற்றும் பிரதேசங்களும் தங்களது வளர்ச்சி நெடுநோக்குத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்