சீனாவின் முதலாவது செவ்வாய்க் கிரக ஆய்வுத் திட்டம்

பூங்கோதை 2020-07-21 10:36:37
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் முதலாவது செவ்வாய்க் கிரக ஆய்வுக்கலம் உரிய நேரத்தில் விண்ணில் ஏவப்படவுள்ளது என்று தேசிய விண்வெளி பணியகம் அண்மையில் அறிவித்தது. தற்போது, பெய்ஜிங் விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தில் பல்வேறு பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்கள், பல்வேறு வசதிகளைச் சரிப்படுத்தி இத்திட்டத்துக்கு முன்னேற்பாடு மேற்கொண்டு வருகின்றனர்.

மனிதரை ஏற்றிச்சென்ற விண்வெளித் திட்டம் மற்றும் சந்திர மண்டல ஆய்வுடன் ஒப்பிடும்போது, புதிய விண்கல மேடை, புதிய ஆய்வுத் துறை, நீண்டகால நடைமுறையாக்கம், சிக்கலான அளவீட்டு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புமுறை உள்ளிடவை இந்தப் புதிய திட்டத்தின் தனிச்சிறப்புகளாகும். செவ்வாய்க் கிரக ஆய்வுத் திட்டத்துக்கான கட்டுப்பாட்டுக் குழு 2018ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்வாண்டு, இத்திட்டத்துக்கான தேவைகளை உறுதியுடன் நிறைவு செய்யும் வகையில், அவர்கள் கரோனா வைரஸின் பாதிப்பைச் சமாளித்து, மனித மற்றும் மூலவளங்களை அறிவியல் முறையில் ஏற்பாடு செய்து, உகந்த திட்டங்களையும் வகுத்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்