வூஹான் வைரஸ் ஆய்வகத்தின் ஆய்வாளர் “சயின்ஸ்” இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி

ஜெயா 2020-07-29 10:59:10
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜுலை 24ஆம் நாள், உலகளவில் புகழ்பெற்ற “சயின்ஸ்” எனும் இதழ் வூஹான் வைரஸ் ஆய்வகத்தின் ஆய்வாளர் ஷி சேங்லி என்பவரின் சிறப்புப் பேட்டியை வெளியிட்டது. அப்பேட்டியில் ஷி சேங்லி, புதிய கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து ரகசியமாக வெளியேறியது என்று டிரம்ப் கூறியுள்ளதை உண்மைக்குப் புறம்பானது எனக்கூறி மறுத்துள்ளார். அதோடு, தவறான கருத்தை வெளியிட்டமைக்காக டிரம்ப் எங்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கின்றார் என்றும் அவர் கூறினார்.

தங்களின் வைரஸ் ஆய்வகம் எப்போதுமே புதிய கரோனா வைரசினை ஆராயவில்லை என்றும், இந்த வைரஸின் இருப்பு பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், வூஹான் வைரஸ் ஆய்வகத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களும் மாணவர்களும் தங்களை உடல் பரிசோதனைக்கு உடபடுத்திக் கொண்டனர் என்றும் யாருக்கும் எவ்விதத் தொற்றும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்