சீனாவில் வெள்ளப்பெருக்கு பற்றிய தரவுச் சேவைக்கான இணையதளம் தொடக்கம்

பூங்கோதை 2020-08-04 16:17:58
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2020ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் சீனாவில் வெள்ளப்பெருக்கு பற்றிய தரவுச் சேவைக்கான இணையதளச் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. உள்ளூர் அரசுகள், பேரழிவு அபாயக் குறைப்பு நிறுவனங்கள், அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றுக்கு அறிவியல் தரவுகளையும், தகவல் காப்புறுதியையும் இந்த இணையதளத்தால் வழங்க முடியும்.

இதுவரை, போயாங் ஏரி, ச்சோவ்ஹூ ஏரி, தாய்ஹூ ஏரி உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 64 அடிப்படை நிலவியல் தரவுகளின் தொகுப்புகள், உயர் பிரிதிறன் கொண்ட 9 செயற்கைக் கோள்கள் வழங்கிய தொலை உணர்வறித் தரவுகளின் தொகுப்புகள், நாடளவில் வெள்ளப்பெருக்கு நிலைமைக்கான கண்காணிப்புத் தரவுகள் முதலிய தரவுகளை இந்த இணையதளம் வழங்கியுள்ளது.

ஆகஸ்டு 3ஆம் நாள் வரை, 2588 துறை சார் பயனாளர்களும், 151 அறிவியல் ஆய்வுக் குழுக்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்