வெற்றிகரமாக ஏவப்பட்ட காவ்ஃபென் செயற்கைக் கோள்

வான்மதி 2020-08-23 20:35:21
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

காவ்ஃபென்-9 05 செயற்கைக் கோள் ஆகஸ்ட் 23ஆம் நாள் காலை 10:27 மணிக்கு, ஜியூ சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-2டி ஏவூர்தி மூலம் திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப் பாதைக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. வெற்றி பெற்ற இந்த ஏவுதல் திட்டத்தில், பன்னோக்கு செயற்திறனுடைய சோதனை செயற்கைக் கோள் ஒன்றும், தியன்துவோ-5 எனும் செயற்கைக் கோளும் ஏவப்பட்டன.

காவ்ஃபென்-9 05 செயற்கைக் கோள், ஒளியியல் தொலை உணர்வறி செயற்கைக் கோளாகும். தேசிய நில அளவீடு, நகரத் திட்ட வரைவு, சாலை வலைப் பின்னல் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு, பேரிடர் தடுப்பு உள்ளிட்ட துறைகளில் பயன்படக் கூடிய இச் செயற்கைக் கோள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் போன்ற திட்டப்பணிகளுக்கும் தகவல் காப்புறுதியை வழங்க முடியும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்